யாழ்ப்பாணம் கீரிமலையில் மீன்பிடித் துறைமுகமொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் சினத்தை ஏற்படுத்தியுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஆடி அமாவாசை தினத்தையொட்டி, கீரிமலையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிதிர் கடன் செலுத்தும் வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணனும் கலந்து கொண்டிருந்தார்.
பிதிர் கடன்களை மேற்கொள்கின்ற முக்கிய புனித தலமாக விளங்குகின்ற கீரிமலை ஆலயப்பகுதி யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் பெருந்தொகையான பொதுமக்களின் காணிகளைக் கைப்பற்றி படையினர் நிலை கொண்டுள்ள பகுதிக்கு அண்மையில் அமைந்துள்ளது.
இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு மாகாணத்தின் பிரபல்யம் மிக்கதும், மீன்வளம் மிகுந்ததுமான மயிலிட்டி துறைமுகத்தையும் அதனைச் சூழ்ந்துள்ள பொதுமக்களின் காணிகளையும் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களிடம் கையளிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக இடம்பெயர்ந்த மக்கள் போராடி வருகின்றார்கள்.
கடந்த 1990ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்தில் பலாலி விமான தளத்தைச் சூழவுள்ள காங்கேசன்துறை துறைமுகம் மயிலிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் இருந்து பொதுமக்கள் படையினரின் பாதுகாப்பை முன்னிட்டு, இராணுவத்தால் வெளியேற்றப்பட்டிருந்தனர். இவ்வாறு பொதுமக்கள் வெளியேற்றப்பட்ட பிரதேசங்களில் ஒரு பகுதியில் மட்டுமே இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மயிலிட்டி துறைமுகத்தையும் அதனைச் சூழ்ந்த பிரதேசங்களையும் மீளக் கையளிப்பதாகக் கூறிக்கொண்டு, அதன் அருகில் உள்ள இந்துக்கள் புனிதமாகக் கருதும் தலமாகிய கீரிமலையில் மீன்பிடி துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கமும் அரசியல்வாதிகளும் முயற்சிகள் மேற்கொள்வது கண்ணியமற்ற செயலாகும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சாடியுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
எந்த மதங்களைச் சார்ந்ததாயினும் மதத்தலங்களின் புனிதம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற வகையில் கீரிமலை பிரதேசத்தில் மீன்பிடி துறைமுகம் ஒன்றை அமைப்பதென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு இதனைப் புரிந்து கொண்டு மாற்றுத் திட்டங்களை முன்வைக்கும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார்.
கீரிமலையில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான முயற்சிகளை எதிர்த்து அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்துமத முக்கியஸ்தர்களினால் சில தினங்களுக்கு முன்னர் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to கீரிமலையில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் அரசின் திட்டத்துக்கு சி.வி.விக்னேஸ்வரன் எதிர்ப்பு!