Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் அச்சத்தை போக்கி நம்பிக்கையுடன் வாழ்வியலில் ஈடுபடுவதற்கு இவர்கள் அனைவருக்கும் தகுந்த தரம் வாய்ந்த மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

பிரச்சினை குறித்து பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் இன்று (3) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது,

மேற்படி விடயம் தொடர்பாக முன்னாள் போராளிகளின் தொடச்சியான உயிரிழப்பு பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்துகின்றது.

கடந்த காலத்தில் அரசாங்கத்தால் புனர்வாழ்வு அழிக்கப்பட்டு பதினோராயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்களுள் சிலர் தொடர்ச்சியாக மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றனர்.

அதிலும் புற்று நோய் காரணமாகவே உயிரிழப்பு அதிகரித்துக் காணப்படுகின்றது.

எனவே தமக்கு இரசாயண உணவும் சந்தேகத்திற்கிடமான மருந்தும் ஏற்றியதாக புனர்வாழ்வில் இருந்து விடுதலையான முன்னாள் போராளி பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருந்தார்கள்.

எனவே பொதுமக்கள் மற்றும் முன்னாள் போராளிகள் மத்தியிலும் மிக மோசமான அச்ச உணர்வை ஏற்படுத்துகின்றது.

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளிற்கு இவ்வாறான மரண பயம் உளவியல் ரீதியாக மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.அதனால் இவர்களது எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.

ஆகவே இவர்களுடைய அச்சத்தை போக்கி நம்பிக்கையுடன் வாழ்வியலில் ஈடுபடுவதற்கு இவர்கள் அனைவருக்கும் தகுத்த தரம் வாய்ந்த மருத்துப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

அவர்களை பாதுகாக்க வேண்டியது உங்களின் தார்மிகக் கடமையும் பொறுப்பும் ஆகும். ஆனால் வழமைப்போல் இதனையும் அரசியலாக புறம் தள்ளி விடாதீர்கள்.

எனவே இவ்வாறான நிலை கட்டமைக்கப்பட இன அழிப்பின் ஓர் வடிவமாகவே எம்மால் நோக்க வேண்டியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் என நீங்களே உங்களிற்கு கூறிக் கொள்வதை விடுத்து கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழ் மக்கள் திருப்தியடையக் கூடிய வகையில் எந்த விதமான ஆக்கபூர்வமான நல்லெண்ண முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

தமிழ் மக்களால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்திலும் முன்னேற்றகரமான செயற்பாடுகள் இது வரை முன்னேடுக்கப்படவில்லை.

ஆகவே மனங்கள் வெல்லப்படாத வரை நல்லிணக்கம் ஏற்படப் போவதில்லை.

சிங்கள மேட்டிமை வாத போக்கு உள்ளவரை நல்லிணக்கம் என்பது கானல் நீர்தான்.

இவற்றை ஏன் நீங்கள் புறிந்து கொள்கிறீர்கள் இல்லை என்பதே வேதனையாகவுள்ளது. எனவே முன்னாள் போராளிகளின் அச்சத்தினை போக்க வழிவகுப்பீர்கள் என நம்புகின்றோம். என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் பிரதிகள் ஜ.நா. தூதரகம், அமெரிக்க தூதரகம், இந்தியா தூதரகம், சுவிஸ்சர்லாந்து தூதரகம், பிரித்தாணியா தூதரகம் ஆகியவற்றின் தூதுவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to இன அழிப்பின் ஓர் வடிவமே முன்னாள் போராளிகளின் திடீர் மரணம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com