அரச புனர்வாழ்வில் இருந்த போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடுத்து, அது தொடர்பில் உடனடியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையை மேற்பார்வையிடுவதற்காக நேற்று வெள்ளிக்கிழமை விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
டி.எம்.சுவாமிநாதன் கூறியுள்ளதாவது, “தமிழ் அரசியல் கைதிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலைக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் திகதிக்கு முன்னர் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியவர்களின் விபரங்கள் கிடைக்கும். தற்போது 89 பேரின் விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவர்களில் யாருக்கு புனர்வாழ்வு அளிக்க முடியும் என்பது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை. இது தொடர்பில் சட்டமா அதிபருடன் கலந்துரையாடியுள்ளேன்.
பல வருடகாலமாக தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன. இதற்கு முடிவு காணப்பட வேண்டும். முன்னாள் போராளிகள் சிலருக்கு புனர்வாழ்வளிக்க கடந்த முறை சில சட்டத்தரணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், அரசியல்வாதிகளுடன் இது தொடர்பாக கதைத்துள்ளேன். இனி இவ்வாறான எதிர்ப்புகள் வராது.
விச ஊசி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் எங்களுக்கு எதுவும் தெரியாது. யார் ஏற்றினார்கள், யார் கொடுத்தார்கள் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. எனினும் இவ்விடயம் தொடர்பில் விசாரணை செய்த போது சில போராளிகள் உண்மையாக சாதாரண நோய் காரணமாகவே இறந்துள்ளனர். ஆனால் இருவர் ஏதோ ஒரு சுகயீனம் காரணமாக இறந்தார்கள் எனவும் தெரியவந்துள்ளது.
எனினும் இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன். விச ஊசி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன. இதற்கு உடனடியாக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்.” என்றுள்ளார்.

0 Responses to விச ஊசி விவகாரம்; உடனடி விசாரணை கோரி ஜனாதிபதிக்கு கடிதம்: டி.எம்.சுவாமிநாதன்