Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நாளை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 01) முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை ‘இன ரீதியான அநீதியை ஒழித்தல்’ தொடர்பிலான கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பிலான விவகாரம் எதிர்வரும் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் மீளாய்வு செய்யப்படவுள்ளது.

இதில், இலங்கையின் சார்பில் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி கலாநிதி ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான குழுவினர் கலந்துகொள்ளவுள்ளதுடன், இலங்கை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கும் பதிலளிக்கவுள்ளனர். அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றின்  உயர் அதிகாரிகளும்  இந்தக் கூட்டத்  தொடரில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இன ரீதியான அநீதியை ஒழித்தல் தொடர்பான  குழுவில்  177 நாடுகள் அங்கம் வகிப்பதுடன் அதில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.  இதனிடையே, இலங்கை குறித்து மூன்று சிவில் சமூக நிறுவனங்கள் தமது சமர்ப்பணங்களை இன ரீதியான  அநீதியை ஒழித்தல் தொடர்பான குழுவுக்கு கையளித்துள்ளன.

0 Responses to ‘இன ரீதியான அநீதியை ஒழித்தல்’ தொடர்பிலான ஐ.நா. அமர்வு நாளை ஆரம்பம்; இலங்கை விவகாரமும் மீளாய்வு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com