Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கழிப்பறையில் செய்ய வேண்டியதை சாப்பாட்டறையில் செய்வது பிழையான விடயம் என்றும், அரசியல் ரீதியான ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு பாராளுமன்றம் உகந்த இடமல்ல என்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

காணாமற்போனவர்கள் பற்றிய அலுவலகம் அமைப்பதற்கான சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) பாராளுமன்ற உறுப்பினர்கள், நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை பாராளுமன்றத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்தினர். அத்தோடு, குறித்த சட்டமூலம் உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை கூறி கூட்டு எதிரணியினர் நேற்று வெள்ளிக்கிழமையும் சர்ச்சையை ஏற்படுத்தினர்.  இதற்கு பதிலளிக்கும் வகையில் சபாநாயகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அரசியலில் புரட்சிகரமாக நடந்துகொள்ளவேண்டியது அவசியம். அதற்கு லிப்டன் சுற்றுவட்டம், புறக்கோட்டை ரயில் நிலையம், மருதானை புகையிரத நிலையம், ஹைட்பார்க் என பல இடங்கள் உள்ளன. ஆனால் பாராளுமன்றத்தில் அவ்வாறு செய்ய முடியாது. கழிப்பறையில் செய்ய வேண்டியதை சாப்பட்டறையில் செய்வது பிழையான விடயம். 'கௌரவ உறுப்பினர்கள்' என விளிக்கப்படுவதற்கமைய அதற்கான கௌரவத்துடன் உறுப்பினர்கள் நடக்க முன்வரவேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to கழிப்பறையில் செய்ய வேண்டியதை சாப்பாட்டறையில் செய்யாதீர்கள்; மஹிந்த அணியை நோக்கி சபாநாயகர் சாடல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com