இலங்கையில் நீடித்து வரும் இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பினூடாக தக்க தீர்வைக் காணுவது அவசியமாகும். அதற்கு சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள நோர்வே பிரதமர் எர்னா சோல்பேர்க்கும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன்போதே, இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, மீள்குடியேற்றம், இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணி விடுவிப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் இன்னும் துரிதமாக இடம்பெற வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சி தலைவர், இச்செயற்பாடுகளிலும் சர்வதேசத்தின் கரிசனை அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நோர்வே பிரதமர், “இலங்கையின் பொருளாதாரம் மற்றும் மீள்கட்டுமான நடவடிக்கைகளில் நோர்வேயின் ஆக்கபூர்வமான பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கும்.” என்றுள்ளார்.

0 Responses to இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பினூடு தீர்வு காண்பது அவசியம்; நோர்வே பிரதமரிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு!