Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்கள் காலங்காலமாக எதிர்கொண்டு வரும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பும் அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் அத்துல் கேஷாப்புக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே, இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் இரா.சம்பந்தன்  தெரிவித்துள்ளதாவது, “நடைபெற்றிருக்கும் இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கின்றது. தமிழ் மக்கள் விடயத்தில் அமெரிக்கா தொடர்ச்சியான பங்களிப்பை செலுத்தி வருகின்றது.  அதனடிப்படையில் 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு ஒத்ததான தீர்வினை தமிழர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கும், காணாமற்போனவர்கள் விடயம், மீள்குடியேற்ற விடயம், மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் விடயம் போன்றவற்றிலும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய வாழ்வாதார மேம்பாட்டு விடயத்திலும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் பங்களிப்பு எமக்கு தொடர்ச்சியாக வேண்டும் என்பதை கேட்டிருக்கின்றோம்.” என்றுள்ளார்.

0 Responses to அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பு அவசியம்: சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com