Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன, மத, குல வேறுபாடுகளற்ற விளையாட்டு மைதானங்கள் நல்லிணக்கத்திற்கான மையங்களாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டிய மகாவலி விளையாட்டரங்கில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற 'விளையாட்டு நட்சத்திரங்கள் 2016' விளையாட்டு விழாவின் அங்குரர்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி  இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நல்லிணக்கத்தை வார்த்தைகளுக்குள் மட்டுப்படுத்திவிடாது நடைமுறைக்குக் கொண்டுவருவதற்காக கடந்த ஒன்றரை வருடகாலமாக அரசாங்கம் கூடிய அர்ப்பணிப்புடன் செயற்பட்டு  வருகின்றது.

நாட்டு மக்கள் மத்தியில் சமாதானம், ஐக்கியம், சகோதரத்துவம் மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பி நாட்டை முன்னேற்றுவதற்காக விளையட்டுத்துறையினால் பெற்றுக்கொடுக்க முடியுமான பங்களிப்புகள் மிகவும் கூடியதாகும்.

அந்த வகையில் நாட்டில் 9 மாகாணங்களிலுமுள்ள நகர மற்றும் கிராமப்புற விளையாட்டு மைதானங்களை மேம்படுத்தி அவை எல்லாவற்றையும் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான மையங்களாக அமைக்கவுள்ளோம்.” என்றுள்ளார்.

0 Responses to இன, மத வேறுபாடுகளற்ற விளையாட்டு மைதானங்கள் நல்லிணக்கத்தின் மையங்கள்: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com