Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காங்கிரஸ் கட்சியோடு தமாகாவை இணைக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அழைப்புக்குக் காத்திருக்கிறார் தமாகா தலைவர் ஜிகே.வாசன் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

மீண்டும் காங்கிரஸ் கட்சியோடு இணைப்பு விழா நடத்துவதற்கு ஆயத்தமாகிவிட்டார் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன். சோனியா காந்தியை சந்திக்க அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துவிட்டார். விரைவில் மேலிடத்தில் இருந்து அழைப்பு வரும் என்கின்றனர்  த.மா.கா நிர்வாகிகள்.

சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்து தேர்தலை சந்தித்தார்  ஜி.கே.வாசன். அவரது கூட்டணி முடிவை எதிர்த்து பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். த.மா.கா மூத்த துணைத் தலைவராக இருந்த எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், வேலூர் ஞானசேகரன், கோவை மகேஸ்வரி உள்ளிட்டவர்கள் அ.தி.மு.க கூடாரத்திற்கு இடம் பெயர்ந்தனர்.இதன்பின்னர் மக்கள் நலக் கூட்டணியில் தொடர்வதை விரும்பாத ஜி.கே. வாசன், உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்து, கட்சி நிர்வாகிகளிடம் விவாதித்து வந்தார். அதே வேளையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குப் புதிய தலைவரை நியமிப்பதில் மேலிடத்தில் குழப்பம் நீடித்து வருகிறது. 

இளங்கோவனைத் தவிர்த்து யாரை நியமித்தாலும், சத்யமூர்த்தி பவனில் கோஷ்டி மோதலே அதிகரிக்கும் என்பதால் சோனியா காந்தி தீவிர ஆலோசனையில் இருக்கிறார். இந்தநேரத்தில் சோனியாவை சந்தித்துப் பேசுவது சரியானதாக இருக்கும் என எண்ணுகிறார் ஜி.கே.வாசன் என விவரித்தார் த.மா.கா மாநில நிர்வாகி ஒருவர்.

தொடர்ந்து அவர்,எங்கள் கட்சியின் பொருளாதார நிலைமை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. சட்டமன்றத் தேர்தலில் அரை சதவீத ஓட்டுக்களை மட்டுமே வாங்கினோம். எங்கள் கட்சியின் பூர்வீக ஓட்டுக்கள்கூட எங்களுக்கு விழவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் பிரதான கட்சிகள் எல்லாம் தனித்துக் களம் காண்பதற்கே வாய்ப்புகள் அதிகம் என்பதால், நாங்களும் தனித்துப் போட்டியிட முடிவு செய்தோம். 

உள்ளூரில் செல்வாக்குமிகுந்த கட்சிக்காரர்களை அடையாளம் கண்டு விருப்புமனு வாங்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறோம். இதையடுத்து வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவோடு கூட்டணி அமைப்பது குறித்து விவாதித்து வந்தோம். தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருந்தாலும், த.மா.கா வருகையை தி.மு.க தலைவர் எதிர்க்க மாட்டார்' என நம்பிக்கையோடு பேசி வந்தோம். இந்த நேரத்தில், எங்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் மாற்று முகாம்களுக்குச் சென்றுவிட்டார்கள். மூப்பனார் காலத்தில் இருந்ததுபோல, தற்போதைய சூழல் இல்லை. மக்களின் மனநிலையைக் கணிக்க  முடியவில்லை.

எனவே, 'மீண்டும் காங்கிரஸ் கட்சியோடு இணைந்துவிடலாம்' என்பதுதான் ஜி.கே.வாசனின் எண்ணமாக இருக்கிறது.இதுகுறித்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் நண்பர்களிடம் தீவிரமாகப் பேசி வந்தார் ஜி.கே. வாசன். காங்கிரஸ் முன்னணித் தலைவரான திக்விஜய் சிங்கிடம், இணைப்பு குறித்து விரிவாகப் பேசியிருப்பதோடு, சோனியாவை சந்திக்க திக்விஜய் சிங் மூலம் காய்களை நகர்த்தி வருகிறார். சோனியாவை சந்தித்துவிட்டால், இணைப்பு விழா சாத்தியப்பட்டுவிடும் என்பதில் தெளிவாக இருக்கிறார் அவர். இன்னும் சில நாட்களில் டெல்லியில் இருந்து அழைப்பு வரும் என எதிர்பார்க்கிறோம்" என்றார் அந்த நிர்வாகி.

0 Responses to சோனியா காந்தியின் அழைப்புக்காக காத்திருக்கிறார் ஜி.கே.வாசன்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com