பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றுவது தொடர்பில் அரசாங்கம் எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழித்து அதற்கு பதிலாக புதிய சட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகி வரும் தகவல்களையும் அவர் முற்றாக நிராகரித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி, புதிய சட்டமொன்றை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்ததாக கொழும்பிலுள்ள ஊடகங்கள் நேற்று புதன்கிழமை செய்தி வெளியிட்டிருந்தன.
ஆனால், கொழும்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவிலாளர் சந்திப்பில் பங்கேற்ற ராஜித சேனாரத்ன, அவ்வாறான விடயம் குறித்து அரசாங்கம் இதுவரை தீர்மானிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டம் விரைவில் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவரப்படும். அதன்மூலம், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள 78 வழக்குகள் தொடர்பிலான மீளாய்வு அறிக்கையை சட்டமா அதிபர் அடுத்த மாதம் 15 ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றுவது தொடர்பில் அரசாங்கம் தீர்மானிக்கவில்லை: ராஜித சேனாரத்ன