Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த தொடர்பிலான இரகசியங்கள் உரிய நேரத்தில் மக்களிடத்தில் வெளிப்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. 

கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதற்கு அமைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரகசியங்கள் உரிய நேரத்தில் சரியான சந்தர்ப்பம் பார்த்து வெளியிடப்படும். அவர் தொடர்பில் என்னிடமும் பல இரகசியங்கள் இருக்கின்றன.

மஹிந்த ராஜபக்ஷ எப்போது தனித்து அரசியல் பயணத்தை ஆரம்பிப்பாரோ அப்போது இரகசியங்களை வெளிப்படுத்துவோம். மஹிந்த தொடர்பிலான இரகசியங்கள் நிதி மோசடிகள் அல்லது ஊழல் மோசடிகள் தொடர்பானது என்று மட்டும் அர்த்தம் கொள்ளக் கூடாது.  அதையும் தாண்டிய பல்வேறு விடயங்கள் உள்ளன. அந்த இரகசியங்களில் பல அரசியல் ரீதியானவை.” என்றுள்ளார்.

0 Responses to மஹிந்த தொடர்பிலான இரகசியங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும்; அரசாங்கம் தகவல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com