Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முஸ்லிம் மக்களுக்கு தனி மாகாணமொன்று அவசியம் என்றும், அதனை அரசியல் சாசனப் பேரவையில் வலியுறுத்தப் போவதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

முஸ்லிம்களுக்கு தனியான மாகாண நிர்வாக அலகு ஒன்று அவசியமாகின்றது என்ற நிலைப்பாட்டை கட்சி தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாக முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கிடையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுக்களின் போதும் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கை வாழ் முஸ்லிம்களின் அடையாளங்களை உறுதி செய்து கொள்ள அனைத்து தரப்பினரும் இணைந்து செயற்படுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம் பெரும்பான்மையுடைய பகுதிகளை உள்ளடக்கி மாகாண நிர்வாக அலகு உருவாக்கப்பட வேண்டும் என்றும், சுதந்திரத்தின் பின்னரான கிழக்கு மாகாணமல்ல தற்போது காணப்படுவது,  சனத்தொகை பரம்பல் மற்றும் பூவியியல் ரீதியான காரணிகள் ஆகியன மாற்றமடைந்துள்ளதாகவும் ஹசன் அலி கூறியுள்ளார்.

0 Responses to முஸ்லிம் மக்களுக்கு தனியான மாகாண அலகு அவசியம்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com