Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு - கிழக்கில் விகாரைகள் உள்ளிட்ட வணக்கஸ்தலங்களை அமைப்பதைக் காட்டிலும், போரினால் நலிவுற்ற மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதே அத்தியாவசியமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

போரினால் பாதிப்பிற்குள்ளான வணக்கஸ்தலங்களை புனரமைப்பு செய்வதற்கு கடந்த வாரம் அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதுகுறித்து  கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் கூறியுள்ளதாவது, “போர் நிறைவடைந்து 7 வருடங்கள் கடந்த போதிலும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படாமல், பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படாமல் உள்ளது. இவை பற்றி அரசாங்கம் அறிந்திருந்தும் எவ்வித ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை.

போர்க் காலத்தில் அழிவடைந்ததாக அரசாங்கம் கூறும் விகாரைகள் எவையும் வடக்கு கிழக்கில் இல்லை. தமிழர் பிரதேசங்களில் மேலும் பல விகாரைகளை அமைக்கும் நோக்கிலேயே அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது.

இவ்வாறான திட்டமிட்ட மதத் திணிப்பு நடவடிக்கைகள் கடந்த கால ஆட்சியாளர்களின் செயற்பாடுகளையே காட்டி நிற்பதாகவும், இவற்றிற்கு மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக அரசாங்கம் தெரிவிப்பது, தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு - கிழக்கில் விகாரைகளை அமைப்பதைக் காட்டிலும் மக்களின் வாழ்வை மீளமைக்க வேண்டியது அவசியம்: சித்தார்த்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com