தமிழக முதல்வர் ஜெயலலிதா குணமடைந்துவிட்டதாகவும், அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் காய்ச்சல் காரணமாக ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட ஜெயலலிதா, தற்போது நலமுடன் இருக்கிறார் என்றும், தொடர்ந்து மருத்துவர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதால், எப்போது வீடு திரும்புவார் என்று தெரிவிக்கவில்லை என்றாலும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம்.தெரிவித்துள்ளது.
வழக்கம் போல சாப்பிடும் உணவைத்தான் ஜெயலலிதா சாப்பிட்டு வருகிறார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

0 Responses to ஜெயலலிதா குணமடைந்தார்: விரைவில் வீடு திரும்புவார்?