முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் கமல் குணரட்னவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இறுதி மோதல்கள் இடம்பெற்ற காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அடையாள அட்டையை கொழும்பிலுள்ள பாதுகாப்பு தலைமையகத்தில் ஒப்படைக்குமாறு தாம் உத்தரவிட்டிருந்ததாகவும், எனினும், அந்த அடையாள அட்டை கமல் குணரட்னவிடம் இருப்பது அண்மையிலேயே தமக்கு தெரிய வந்ததாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
அடையாள அட்டையை ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்ட நிலையில், அவர் எவ்வாறு அடையாள அட்டையை வைத்திருக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி, “கமல் குணரட்ன 2009ஆம் ஆண்டில் தமது உத்தரவுகளை ஏற்றுக் கொண்டு செயற்படாமைக்காக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to உத்தரவுகளை மீறியமை தொடர்பில் கமல் குணரட்னவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை அரசியம்: சரத் பொன்சேகா