வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரியுள்ளார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் மக்கள் பேரவையினால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணிக்கு அரசாங்கத்தின் வளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வரலாற்றில் முதல்முறையாக தமிழ் பிரிவினைவாத ஆர்ப்பாட்டத்துக்கு அரசாங்கத்தின் அனுசரனை கிடைத்துள்ளது. அதேபோல, இனவாதத்தை கக்குகின்ற சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் ஒத்துழைத்துள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to சி.வி.விக்னேஸ்வரனை கைது செய்க: உதய கம்மன்பில..