தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ள ‘எழுக தமிழ்’ பேரணி நாளை மறுதினம் சனிக்கிழமை (செப்டம்பர் 24, 2016) யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது. 1. தமிழர் தாயகத்தில் பௌத்த சிங்கள மயமாக்கலை உடன் நிறுத்தக் கோரியும், 2. தமிழர் தேசம், தனித்துவமான இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான ஒரு சமஷ்டித் தீர்வை வலியுறுத்தியும், 3. போர்க்குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்குமான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியுமே இந்தக் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இறுதி மோதல்களின் முடிவுக்குப் பின்னர் பெருமெடுப்பில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பேரணியாக இதனைக் கொள்ள முடியும். 2002, 2003களில் வடக்கு கிழக்கில் பெரும் வீச்சோடு செய்யப்பட்ட ‘பொங்கு தமிழ்’ எழுச்சி நிகழ்வுகளின் சாயலை எழுக தமிழ் பேரணி கொண்டிருந்தாலும், இரு நிகழ்வுகளுக்குமான காலமும்- அரசியலும் வேறுவேறானவை. அதனை, எழுக தமிழ் ஏற்பாட்டுக் குழுவினர் உணர்ந்து கொண்டிருப்பார்கள்.
இதனிடையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சி மற்றும் ரெலோ ஆகிய கட்சிகள் எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவினை வழங்கவில்லை. அதுபோல, எதிர்ப்பினையும் வெளிப்படையாக வெளியிடவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, குறிப்பாக தமிழரசுக் கட்சியின் கோலொச்சுகளை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை ஒழுங்கு செய்துள்ள எழுக தமிழ் பேரணி வெற்றிபெற்றால் அது, தமக்கான குறிப்பிட்டளவான அச்சுறுத்தலாக மாறும் என்றும் அந்தக் கட்சி கருதுகின்றது. இந்த நிலையில், தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் பேராசிரியர் சிற்றம்பலம் உள்ளிட்ட சிலர் எழுத தமிழ் பேரணிக்கு ஆதரவாக இருக்கின்றார்கள். அவர்கள், கட்சியின் முடிவுகளை மீறி தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுமாவர்.
அத்தோடு, கூட்டமைப்பின் பிரதான கட்சிகளில் புளோட்டும், ஈபிஆர்எல்எப்பும் எழுக தமிழ் பேரணியின் ஏற்பாட்டு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாற்று என்று தங்களை அழைத்துக் கொள்ளும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு நெருக்கமாக பணியாற்றி எழுக தமிழை ஒழுங்கிணைப்பதில் அர்ப்பணிப்பாக செயற்படுகின்றன.
இந்த நிலையில், எதிர்பார்ப்புக்களை மீறி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவளித்துள்ளது. அதற்கான, சுவரொட்டிகளையும் வெளியிட்டிருக்கின்றது. இது, தமிழ் மக்கள் பேரவைக்குள் இருக்கும் சில தரப்புக்களுக்கு பெரும் ஒவ்வாமையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக சிங்கள அரசாங்கங்களோடு இணைந்து பணியாற்றிய ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தற்போது தமிழ் மக்கள் பேரவைக்குள் ஒட்டிக்கொள்ள முனைவது தங்களின் மீது வேறு அடையாளங்களைப் பூசும் என்று அந்தத் தரப்புக்கள் கருதுகின்றன.
இதனிடையே, வடக்கு- கிழக்கு மக்களிடம் எழுக தமிழ் தொடர்பில் குறிப்பிட்டளவான கவனம் இருந்தாலும், அதனை நோக்கி பெருவாரியாக அணிதிரள்வது தொடர்பில் ஆர்வமின்றி இருக்கின்றார்கள். அப்படியான நிலையில், ஏற்பாட்டாளர்கள் எழுக தமிழை நோக்கி மக்களை அழைத்து வருவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றார்கள். குறிப்பாக, வடக்கின் ஊடகங்கள் சில தமக்கு ஆதரவு வழங்கவில்லை என்கிற குற்றசாட்டுக்களையும் முன்வைக்கின்றார்கள்.
இந்த இடத்தில், தமிழ் மக்கள் காலம் காலமாக எதிர்நோக்கி வருகின்ற அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேச ரீதியில் கவனத்தை தொடர்ச்சியாகப் பெற வேண்டிய தேவையொன்று இருக்கின்றது. அதன்மூலமே தென்னிலங்கையை ஓரளவாவது கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதற்காக எழுக தமிழ் போன்ற பேரணிகளும், ஒருங்கிணைவுகளும் அவசியமாகின்றன. அப்படியான நிலையில், பேதங்கள் மறந்து ஒன்றிணைய வேண்டியது அவசியம்.
பெரும் இழப்புக்குப் பின்னாலான சமூகமொன்றின் மீள் எழுச்சி என்பது மெல்ல மெல்ல பல்வேறு ஒருங்கிணைப்புக்கள் நம்பிக்கையூட்டல்களின் மூலமே சாத்தியப்படும். அதுதான், அவர்களின் அரசியலையும் சரியாக வைத்துக் கொள்ள உதவும். அதற்கு எழுக தமிழ் போன்ற பேரணிகளும் சில பங்களிப்பை வழங்கக் கூடியன!.
4tamilmedia

0 Responses to தமிழ்த் தேசிய அரசியலின் மீள் எழுச்சிக்கு ‘எழுக தமிழ்’ பங்களிக்கலாம்!