Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தெற்காசிய நாடுகளில் குறைந்தளவில் எச்.ஐ.வி பரவும்  நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாகவும், 0.1 சதவீத அளவிலேயே இலங்கையில் எச்.ஐ.வி தொற்று காணப்படுவதாகவும் தேசிய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எச்.ஐ.வி நோய் தொற்றுதல் குறித்து அறியாமை மற்றும்  முன்கூட்டியே   அறிந்து கொள்வதில் ஏற்படும் தாமத நிலை நோய் முதிர்ச்சியடைவதற்கான அடிப்படை காரணிகள் என  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  டாக்டர்  பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

குடும்ப சுகாதார பணியகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற  எயிட்ஸ் நோய் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்து கொண்டு கருத்து  தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

எயிட்ஸ் நோயை உண்டாக்கும் மிக நுண்மையான எச்.ஐ.வி வைரஸ் உடலிலுள்ள ஒரு கலத்துக்குள் நுழைந்து பின்னர் அவை முதிர்ச்சியடையும் வரை வெளிப்படுவதில்லை. பலமடைந்து பெருக ஆரம்பித்ததும்  மிக வேகமாக செயல்படுவதால் இதன் தாக்கமும் அதிகமாகவே இருக்கும் என்று  அவர் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to தெற்காசியாவில் எச்.ஐ.வி தொற்று குறைந்த நாடாக இலங்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com