Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 16ஆம் ஆண்டு நினைவு தினத்தன்று மாபெரும் கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

யாழ். பேருந்து நிலையம் முன்பாக எதிர்வரும் 19ஆம் திகதி காலை 10.30 அளவில் யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இந்த கண்டனப் போராட்டம் இடம்பெறவுள்ளது.

“படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமற்போயுள்ள ஊடகவியலாளர்கள், ஊடகப்பணியாளர்களுக்கு, சர்வதேச ஊடக அமைப்புக்கள் முன்னிலையில் காலதாமதமின்றிய விசாரணை வேண்டும். ஊடகவியலாளர்கள் தமது பணிகளை சுதந்திரமாக ஆற்றுவதற்கான சுதந்திரத்தை அனைத்து மட்டங்களிலும் உறுதிப்படுத்தல் வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தை உடனடியாக அமுல்ப்படுத்தல் வேண்டும்.” ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

0 Responses to படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி எதிர்வரும் 19ஆம் திகதி யாழில் போராட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com