தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான புதிய கூட்டு ஒப்பந்தம் நேற்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தொழிற்சங்கங்களுக்கும், முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையிலான இழுபறியினை அடுத்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 18) கைச்சாத்திடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வருடத்தில் 300 நாள் வேலை வழங்கப்பட வேண்டும் என்ற பிரதான உடன்படிக்கையில் மாற்றம் செய்யக்கூடாது எனும் தொழிற்சங்கங்களின் கோரிக்கையை நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போதும் பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனிகள் (முதலாளிமார் சம்மேளனம்) ஏற்றுக்கொள்ளவில்லை.
எனினும், அந்தக் கோரிக்கையின் நியாயத்தன்மையை ஏற்றுக்கொண்ட அமைச்சர்கள் நவீன் திசாநாயக்கவும் ஜோன் செனவிரத்னவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி, முதலாளிமார் சம்மேளனத்தை இணங்கச் செய்வதாக உறுதியளித்துள்ளனர்.
இதன் அடிப்படையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 730 ரூபாய் சம்பளம் வழங்குவதென்ற இணக்கத்தின் அடிப்படையில், புதிய உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும், முதலாளிமார் சம்மேளனம், வருடத்தில் 250 நாள் வேலை வழங்குவதாகத் தெரிவித்து உடன்படிக்கையை புதுப்பித்துள்ளது. இதனை தோட்டத் தொழிற்சங்கங்கள் நிராகரித்ததைத் தொடர்ந்து, சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவின் தலைமையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையிலும் சங்கங்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க முதலாளிமார் சம்மேளனம் மறுத்துவிட்டதாகத் தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டியின் செயலாளர் நாயகம் எஸ்.இராமநாதன் தெரிவித்துள்ளார்.
பிற்பகல் இரண்டரை மணி முதல் நான்கரை வரை நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், அமைச்சர்கள் ஜோன் செனவிரத்ன, மலிக் சமரவிக்கிரம, நவின் திசாநாயக்க, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான், தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் முத்துசிவலிங்கம், ஊவா மாகாண சபை உறுப்பினர் செந்தில் தொண்டமான், தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக்கமிட்டியின் சார்பில் அதன் செயலாளர் நாயகம் எஸ்.இராமநாதன், பிரதித் தலைவர் பி.சந்திரசேன, உதவிச்செயலாளர் எஸ்.முருகையா ஆகியோரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஒரு பிரதிநிதியும் கலந்துகொண்டனர். அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் வெளிநாட்டில் இருப்பதால், கலந்துகொள்ளவில்லை.

0 Responses to வருடத்தில் 300 நாள் வேலை என்பதில் தோட்டத் தொழிற்சங்கங்கள் உறுதி; கூட்டு ஒப்பந்தம் வரும் 18ஆம் திகதி கைச்சாத்து!