முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என கூறப்பட்ட மல்வானை உடமாப்பிடிகம பிரதேசத்தில் உள்ள சொகுசு வீடு மற்றும் 17 ஏக்கர் காணியை பகிரங்க ஏலத்தில் விடுமாறு பூகொடை நீதவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
பூகொடை நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினால் தொடரப்பட்ட வழக்கின் போதே நீதிமன்ற நீதவான் ருவன் பத்திரன, மல்வானை உடமாப்பிட்டிகம பிரதேசத்தில் உள்ள ரூபா 640 இலட்சம் பெறுமதியான 17 ஏக்கர் காணியும், ரூபா 1200 பெறுமதியான சொகுசு வீடும் ஏல விற்பனை செய்து பணத்தை வழக்கு தொடர்பான வங்கிக் கணக்கில் இடுமாறு பூகொடை நீதிமன்ற பதிவாளருக்கு நீதவான் உத்ததரவிட்டுள்ளார்.
இந்தக் காணியின் தற்போதைய உரிமையாளரான முதித ஜயகொடி தனது வழக்கறிஞர் துசிர மெலவ்லே மூலம் காணியின் உரிமை தனக்குரியது அல்ல என்று நீதிமன்றத்துக்கு தெரிவித்ததற்கு அமைய, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவும், தனது வழக்கறிஞர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க மூலம் நீதிமன்றத்துக்கு இக்காணியும், வீடும் தனக்கு சொத்தல்ல என நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தார்.
இதற்கமைய இக்காணி உரிமை தொடர்பாக சிக்கலான நிலைமை உருவாகியது. இது தொடர்பாக அரசாங்க பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சுஜித் முதலிகே நீதிமன்றத்தில் முன்னர் ஏலவிற்பனை செய்வதே சிறந்தது எனக் குறிப்பிட்டிருந்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை வழக்கின் போது சொகுசு வீட்டின் நிர்மாணிப்பாளரான உபுல் ராமவிக்ரம என்பவர் தனது வழக்கறிஞர் மூலம் தனக்கும் இவ்வீட்டைக் நிர்மாணித்ததால் பணம் பெறவேண்டி இருப்பதாகவும் தெரிவித்தார். இவை அனைத்தையும் கருத்திற்கொண்டே நீதிமன்ற நீதவான் இந்த வீட்டையும், காணியையும் ஏலவிற்பனை செய்யுமாறு கட்டளையிட்டார். இவ்வழக்கு எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதி வரை பிற்போடப்பட்டது.

0 Responses to பஷிலுக்கு சொந்தமானது என கூறப்பட்ட சொகுசு வீடு மற்றும் காணியை ஏலத்தில் விட நீதிமன்றம் உத்தரவு!