Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதி விசேட ஜூரிகள் சபையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

விசேட ஜூரிகள் சபை முன்னிலையில்  குறித்த வழக்கை விசாரணை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், ஜூரிகள் சபையில் யார் யார் உள்ளடக்கப்படுவர் என்பது பற்றிய தீர்மானமும் 31ஆம் திகதியே மேற்கொள்ளப்படவுள்ளது.

குறித்த வழக்கை சிங்களம் பேசும் விசேட ஜூரிகளே நடத்த வேண்டும் என பிரதிவாதிகளான கடற்படை அதிகாரிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பாதிக்கப்பட்ட தரப்பினரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை  அதிலும் விசேட பிரதிநிதிகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் ஜுரிகள் முன்னிலையில் விசாரி க்கப்பட முடியாது என்பது சட்டத்தில்  தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதனை மீறி  இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில்  தன்னால் வெளியி டப்பட்ட ஆட்சேபனை கருத்தில் கொள்ளப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆஜராகியிருந்த  சட்டத்தரணி தவராசா தெரிவித்துள்ளார்.

0 Responses to ரவிராஜ் கொலை வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதி விசேட ஜூரிகள் சபையில்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com