அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரிலுள்ள தொழிநுட்பக் கல்லூரி ஒன்றுக்கு வெளியே வாகனத் தரிப்பிடத்தில் கருப்புச் சட்டை அணிந்து வந்த 4 மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 மாணவர்கள் படுகாயம் அடைந்ததுடன் இதில் ஒரு மாணவியின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கிச் சுடு நடந்தவுடன் உடனே கல்லூரிக்குள் ஓடிச் சென்ற 3 மாணவர்கள் அங்கு தம்மை மறைத்துக் கொண்டதுடன் உடனே விரைந்து வந்த போலிசாரின் அறிவுறுத்தலின் படி அனைத்து மாணவர்களும் குற்றவாளிகளைத் தேடும் பணி முடிவடையும் வரை கல்லூரியை விட்டு வெளியேறாது இருந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் அல்லவென்றும் அவர்களது இலக்கு குறித்த படுகாயம் அடைந்த மாணவியே என்றும் தெரிய வந்துள்ளது.
இதனைக் குறித்த கல்லூரியும் உறுதிப் படுத்தியுள்ளது. இன்று புதன்கிழமை பள்ளி நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பும் எனவும் மாணவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஆலோசகர்கள் கடமையில் ஈடுபடுத்தப் படுவர் என்றும் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட மர்ம நபர்களைத் தேடும் பணி முடுக்கி விடப் பட்டிருப்பதாக போலிசார் அறிவித்துள்ளனர். ஆயுத கலாச்சாரம் பரவலாகத் திகழும் அமெரிக்காவில் கல்லூரிகள், பாடசாலைகள் மட்டுமன்றி பொது இடங்களிலும் அண்மைக் காலமாகத் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to சான் பிரான்ஸிஸ்கோ கல்லூரிக்கு வெளியே 4 மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு