ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினருக்கும் இடையில் பெல்ஜியத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை இந்த வருட இறுதிக்குள் இலங்கைக்கு கிடைக்கலாம் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு இலங்கையில் பதிவாகிய மனித உரிமை மீறல்கள் காரணமாக இலங்கைக்கான ஜி.எஸ்.பி வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் இரத்து செய்திருந்தது.
இந்நிலையில் மீண்டும் இந்த வரிச்சலுகையை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் பல நிபந்தனைகளையும் விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதில் பயங்கரவாதத் தடைச் சட்டம் மீளப்பெறப்பட வேண்டும் என்பதும் ஒன்றாகும்.

0 Responses to ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி வரிச்சலுகை வருட இறுதிக்குள் இலங்கைக்கு கிடைக்கலாம்; அரசாங்கம் நம்பிக்கை!