Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதிய அரசியலமைப்பு தொடர்பிலான அறிக்கையொன்று பாராளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசியல் சாசன மறுசீரமைப்பு குழுவின் முக்கியஸ்தரான பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கை சட்டமூலம் அல்ல என்று தெரிவித்துள்ள அவர், பாராளுமன்றத்தில் சில தெளிவுபடுத்தல்களை செய்வதற்காக வெளியிடப்படும் அறிக்கை மாத்திரமே என்றும் கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்பு பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அது நாட்டு மக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யுமளவுக்கானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to புதிய அரசியலமைப்பு தொடர்பிலான அறிக்கையொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com