Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமையால், தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புக்கு மேலதிகமாக பொலிஸ் பாதுகாப்பை வழங்குவதற்கு ஆவணை செய்யுமாறு பொலிஸ்மா அதிபருக்கு வடக்கு மாகாண சபை கடிதமொன்றை எழுதியுள்ளது. 

வடக்கு மாகாண சபையின் சார்பில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானமே குறித்த கோரிக்கையை விடுத்து பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உயிருக்கு தென்னிலங்கையில் உள்ள இனவாதிகளினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

தென்னிலங்கை இனவாதிகள், தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவிட்டு, அதனை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் மீது சுமத்துவதற்கு முயல்கின்றனர் என்று முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவருடைய பாதுகாப்புக்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான தீர்மானமொன்றை வடக்கு மாகாண சபை எடுத்தது. 

மாகாண சபையின் சட்ட ஒழுங்குகளுக்கு அமைவாக, வடக்கு மாகாண முதலமைச்சருக்கு, நாட்டில் உள்ள ஏனைய முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புக்குச் சமமான பொலிஸ் பாதுகாப்பே வழங்கப்பட்டுள்ளது. எனினும், உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமையால், அவருக்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு கோருகின்றோம்.” என்றுள்ளது.

0 Responses to விக்னேஸ்வரனுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கக் கோரி பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com