இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் நிதி மோசடி விசாரணை பிரிவு ஆகியன தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்துக்களினால் அரசாங்கத்துக்குள் எந்தவித பிளவும் ஏற்படவில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
ஜனாதிபதிக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்றும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஜனாதிபதி எவ்விதமான கருத்துக்களையும் கூறவில்லை. மாறாக பக்கசார்பற்ற வகையில் சுயாதீனமான விசாரணைகளை முன்னெடுக்குமாறே அவர் கூறியிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர்களான அநுரபிரியதர்ஷன யாப்பா, எஸ்.பி.திசாநாயக்க மற்றும் இராஜங்க அமைச்சர் டிலான் பெரேரா ஆகியோர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியின் அண்மைய கருத்தைத் தொடர்ந்து பலர் பல்வேறு கருத்துக்களைக் கூறி வருகின்றனர். அரசாங்கம் கவிழப்போகிறது, பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முரண்பாடு, சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளில் ஜனாதிபதி தலையிடுகிறார், சிங்கள வருடப்பிறப்பிற்கு முன்னர் புதிய அரசாங்கத்தை அமைப்போம் என வேறுபட்ட கருத்துக்கள் கூறப்படுகின்றன. இவற்றில் எந்தவிதமான உண்மையும் இல்லையென அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டமை, முன்னாள் கடற்படை அதிகாரிகள் நீதிமன்றத்தில் கூட்டில் நிறுத்தப்பட்டமை, திவிநெகும பணிப்பாளர் ரணவக்க சுற்றுலாத்துறையின் பணத்தை மோசடியாகப் பயன்படுத்தியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்களைத் தொடர்ந்தே ஜனாதிபதி கருத்தைக் கூறியிருந்தார். விசாரணைகள் நியாயமாக முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு உள்ளது. இதன் அடிப்படையிலேயே அவர் அவ்வாறான கருத்துக்களைக் கூறியிருந்தார். இதனால் அரசாங்கத்துக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது என அர்த்தப்படுத்த முடியாது என்றுள்ளார்.
இதேவேளை, சுயாதீன ஆணைக்குழுக்களில் சில குறைபாடுகள் காணப்பட்டாலும் ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்படுகின்றன. இதனை கட்டியெழுப்பவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது என அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா சுட்டிக்காட்டினார்.
கடந்த காலத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறை பயன்படுத்தப்பட்டமைக்கும் தற்பொழுது பயன்படுத்தப்படுகின்றமைக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் உள்ளன. கடந்த காலத்தில் சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியால் ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளில் தலையீடுகள் ஏற்பட்டன. இருந்தபோதும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களை குறைப்பது மட்டுமன்றி, அதிகாரங்களை சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் வழங்கி ஜனநாயகமயப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார். ஜனாதிபதியின் கருத்துத் தொடர்பில் பலர் மாறுபட்ட நிலைப்பாடுகளை வெளிப்படுத்தினாலும் அரசாங்கத்துக்குள் முரண்பாடு எதுவும் இல்லை என்று அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to ஜனாதிபதியின் கருத்துக்களினால் அரசாங்கத்துக்குள் பிளவுகள் இல்லை: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி