Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாகிஸ்தானை தீவிரவாதத்தின் அடித்தளம் என பிரதமர் மோடி மறைமுகமாக குறிப்பிட்டதை சீனா எதிர்த்துள்ளது. எனவே, குறிப்பிட்ட நாட்டையோ மதத்தையோ தீவிரவாதத்துடன் தொடர்பு படுத்தக்கூடாது என்று அந்நாடு அறிவித்துள்ளது.

மோடி பாகிஸ்தானை தீவிரவாதத்தின் அடித்தளம் என கூறியதை பற்றி செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியதற்கு பதிலளித்த சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங், சீனாவின் தீவிரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் தீவிரவாதத்துடன் எந்த குறிப்பிட்ட நாட்டையோ, மதத்தையோ தொடர்புப்படுத்தக் கூடாது என்று கூறினார்.

மேலும்,தீவிரவாதத்திற்கு எதிராக போராடி கொண்டிருக்கும் பாகிஸ்தான், பல தியாகங்களை செய்துள்ளது. இதை சர்வதேச சமூகம் ஒப்புக் கொள்ள வேண்டும்.இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளுமே சீனாவின் நெருங்கிய நட்பு நாடுகள்தான். இரு நாடுகளுமே தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதியான வழியில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளா.

0 Responses to குறிப்பிட்ட நாட்டையோ மதத்தையோ தீவிரவாதத்துடன் தொடர்பு படுத்தக்கூடாது : சீனா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com