Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தற்போது நடைமுறையிலுள்ள மொழிச் சட்டத்தையே உரிய முறையில் அமுல்படுத்தத் தவறிவரும் அரசாங்கம், எவ்வாறு நாட்டின் இனப்பிரச்சினைகளுக்கு சரியான தீர்வினைக் காணும் என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார். 

மொழிப்பிரச்சினை என்பது தேசிய இனப்பிரச்சினை தீர்விற்கான ஒரு முன்னோடி என்று குறிப்பிட்ட அவர், தன்னை காட்சிக்காக அமைச்சராக வைத்திருப்பதற்கு ஒருபோதும் தயாரில்லை என்றும் கூறியுள்ளார்.

அரச கரும மொழிக் கொள்கை தொடர்பாக நியதிச் சட்ட சபைத் தலைவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு கொழும்பில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மனோ கணேசன் தெரிவித்துள்ளதாவது, “கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அரண்மனை ஆட்சி இடம்பெற்றது. பாராளுமன்றமும் அமைச்சரவையும் பூனைக்குட்டிகளாக இருந்தன.

கடந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக்காலத்தில், அப்போது ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது நான்கு அமைச்சு பதவிகளை சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து ஆட்சியைக் கைப்பற்றியது போல், ஜனாதிபதியும், பிரதமரும் நாட்டில் இல்லாத போது ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என சிலர் கனவு காண்கின்றனர். எனினும் அது போன்ற ஒரு நிலைமை ஒருபோதும் ஏற்படாது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்து செயற்படுத்தும் நல்லாட்சி அரசாங்கமானது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு உரிய இடத்தை வழங்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to மொழிச் சட்டத்தையே நிறைவேற்றத் தவறும் அரசாங்கம், எவ்வாறு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும்?; மனோ கேள்வி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com