எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதி அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாகப் போட்டியிட்டு வரும் தொழில் அதிபரான டொனால்டு டிரம்ப் ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில் சமீபத்தில் இந்தியாவுக்கு திடீர் ஆதரவளித்து பேசியுள்ளார். அதாவது தான் அதிபரானால் இந்தியாவும் அமெரிக்காவும் இன்னும் நெருங்கிய நட்பு நாடுகளாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
நியூஜேர்சியில் குடியரசு இந்துமத கூட்டணி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இக்கருத்தைத் தெரிவித்த டிரம்ப் தானும் இந்தியப் பிரதமர் மோடியும் இணைந்து ஒரு தனி எதிர்காலத்தை உருவாக்கப் போகின்றோம் என்றதுடன் பிரதமர் மோடியின் தொடர்ச்சியான பொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவை விரைவாக வளர்ச்சியை நோக்கி இட்டுச் செல்கின்றது என அவரது செயற்பாடுகளைப் பாராட்டியும் பேசியுள்ளார்.
முக்கியமாக தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் பங்களிப்பை வரவேற்றுள்ள டிரம்ப் தான் அதிபராகும் பட்சத்தில் இந்தியாவுடனான இராணுவ பாதுகாப்பு வலிமைப் படுத்தப் படும் எனவும் தெரிவித்ததுடன் இவ்வளவு நெருக்கமாக உள்ள இந்தியாவை ஹிலாரி கண்டுகொள்ளவில்லை எனவும் குற்றம் சுமத்தினார்.
இதேவேளை சிக்காகோ மற்றும் இல்லினாய்ஸ் மாநிலத்தில் ஹிலாரி கிளிங்டனை ஆதரித்து நிதி திரட்டும் நிகழ்ச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றிருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, டொனால்டு டிரம்ப் மீதான எதிர்மறையான விமர்சனைங்களை ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டதுடன் அவரை Come on man! என நேற்றைய ஓஹியோ மாநில ஜனநாயகக் கட்சி பிரசாரக் கூட்டத்தின் போதும் கடும் சவாலிட்டு அழைப்பு விடுத்துள்ளார்.
முக்கியமாக ஒபாமா தனது பேச்சில் இவ்வாறு குறிப்பிட்டார். 'பெண்களைப் பற்றி கேவலமாகவும் கீழ்த்தரமாகவும் பேசி வருவதுடன், சிறுபான்மை மக்கள், புலம்பெயர் மக்கள், இதர மதத்தினர், ஆகியோரை இழிவாகப் பேசியும், ஊனமுற்றவர்களை கேலி செய்தும், மற்றவர்களைத் தரம் தாழ்த்தியும் பேசி வரும் டொனால்டு டிரம்ப் கண்டிக்கத் தக்கவர். இவர் கையில் அதிகாரத்தைத் தருவது எவ்வளவு பெரிய பாதகமான விளைவை ஏற்படுத்தும் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்!' என்று தெரிவித்தார்.
மேலும் தன்னை செல்வந்தராகவே காட்டிக் கொண்டு வந்த டிரம்ப் திடீரென உழைக்கும் மக்களுக்காகத் தான் இருக்கின்றேன் என நடித்துக் கொண்டிருப்பதாகக் கூறிய ஒபாமா அடித்தட்டு மக்களுக்காக இவர் என்ன செய்திருக்கின்றார் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் ஏழை மக்களுக்காக நான் இருக்கின்றேன். வாருங்கள் பார்க்கலாம் ! என்று பொருள் பட Come on Man! எனவும் டொனால்டு டிரம்புக்கு ஒபாமா சவாலிட்டது குறிப்பிடத்தக்கது.

0 Responses to டிரம்பின் திடீர் இந்திய ஆதரவு!: மேடைப் பேச்சில் ஒபாமா கடும் சாடல்