பெங்களூருவில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மர்ம நபர்களால் நேற்று படுகொலை செய்யப்பட்டார்.. இதனையடுத்து பெங்களூருவின் முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆர். ருத்ரேஷ் என்பவர், சிவாஜிநகர் சகா பகுதியின் ஆர்எஸ்எஸ் மண்டல தலைவராகவும், ஷிவாஜி நகர் பா.ஜ., செயலாளராகவும் இருந்தார். நேற்று இரவு, அவரது வீட்டுக்கு அருகே பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பிச் சென்றுள்ளனர். இவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்து அமைக்களைச் சேர்ந்த பிரமுகர்கள் கொலை செய்யப்படுவது தொடர்கதையாகி வருவதால் பெங்களூருவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெங்களூருவின் முக்கியமான 4 இடங்களில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.
சமீபத்தில் கேரளாவில் பாஜக , பிரமுகர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து மாநிலம் தழுவிய முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. காவிரி பிரச்னை தொடர்பான பதற்றம் தணிந்து வருவதால் பெங்களூருவில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலையால் மீண்டும் பதற்ற நிலை உருவாகி உள்ளது.

0 Responses to பெங்களூருவின் முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு