Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காவிரி தண்ணீர் கர்நாடகத்திற்கு சொந்தம் என்றால் நெய்வேலி மின்சாரம் தமிழகத்துக்குச் சொந்தம் என்று, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு கெடு விதித்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் தமிழக விவசாயிகள் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடிய நிலையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று கூறிவிட்டது. அன்று முதல் தமிழகத்தில் விவசாயிகள்அரசியல் கட்சிகளின் போராட்டம் நாளுக்கு நாள் வலுக்கும் நிலையில் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில்தான் தமிழகத்தில் ஓடும் ரயில்களை 48 மணி நேரம் மறிக்கும் போராட்டத்தில் விவ்சாய சங்கங்கள் ஈடுபட்டுள்ளன.. நேற்று திருவாரூர் மாவட்டம் கோயில்வெண்ணி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் இன்று நெய்வேலி நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் முன்பாக போராட்டம் நடைப்பெற்று வருகிறது.

அப்போது அவர் கூறுகையில்,  மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கிறது. உச்சநீமன்ற தீர்ப்பை புறக்கணிக்கிறது. காவிரித் தண்ணீர் கர்நாடகத்திற்கு சொந்தம் என்றால் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் தமிழகத்துக்கு சொந்தம் இன்று இங்கு மறியல், இனியும் மத்திய அரசு மெத்தனம காட்டினால் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை மறிப்போம் என்றார்.

0 Responses to காவிரி தண்ணீர் கர்நாடகத்திற்கு சொந்தம் என்றால் நெய்வேலி மின்சாரம் தமிழகத்துக்குச் சொந்தம்: பிஆர்.பாண்டியன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com