Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லோதா கமிட்டி பரிந்துரை செய்யும் நபரே பிசிசிஐ-யின் ஆடிட்டராக இருந்து, கணக்கு வழக்குகளை கவனித்துக் கொள்வார் என்று, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் விளையாட்டுக்களில் சூதாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடைப்பெற்று வருவதால், கிரிக்கெட் விளையாட்டை முறைப்படுத்த, நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று, ஓய்வுப் பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி லோதா தலைமையில், உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை நியமித்தது. அந்த குழு, கிரிக்கெட் விளையாட்டுக்கான நெறிமுறைகளை அறிக்கையாக உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த போதும், அதை பிசிசிஐ அமல்படுத்த தாமதம் காண்பித்து வருகிறது. 

இன்று, லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த பிசிசிஐக்கு மேலும் 2 வார கால அவகாசம் கொடுத்துள்ள உச்ச நீதிமன்றம்,லோதா கமிட்டி பரிந்துரை செய்யும் நபரே பிசிசிஐ-யின் கணக்கு வழக்கு மற்றும் வரவு செலவுகளை கவனிப்பார் என்றும் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

0 Responses to லோதா கமிட்டி பரிந்துரை செய்யும் நபரே பிசிசிஐ-யின் ஆடிட்டராக இருப்பார்: உச்ச நீதிமன்றம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com