இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தொழில்நுட்ப மற்றும் வர்க்க இணக்கப்பாட்டினை ஏற்படுத்தும் (எட்கா) ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால், மீண்டும் சோழ மண்டலம் உருவாகும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) முக்கியஸ்தருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
இதனால், நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திடும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிக்க வேண்டும். இதற்காகவே மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நூதன விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரத்தினபுரியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற கூட்டு எதிரணியின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே விமல் வீரவங்ச கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தென்னிந்தியாவுடன், இணைந்து பாரிய பொருளாதார வலயமொன்றை ஏற்படுத்தி நாட்டை சிங்கப்பூராக மாற்றப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இதற்காக இராமர் பாலத்தை நிர்மாணித்து, இராமேஸ்வரத்தையும், தலைமன்னாரையும் தரை வழியாக இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தலைமன்னாரிலிருந்து குருநாகல் ஊடாக கொழும்புக்கு நெடுஞ்சாலையொன்றை அமைத்துக்கொடுப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது. இவை அனைத்துக்கும் எட்கா உடன்படிக்கையே காரணம்.
கிரேட்டர் தமிழ் நாடு என்ற அடிப்படையினர் வடக்கு, கிழக்கு மாகாணங்களை, தமிழ் நாட்டுடன் இணைப்பதற்கே முயற்சிசெய்யப்படுகிறது. இதன்மூலம் இந்தியாவில் வெளியிடங்களில் மலம் கழிக்கும் இந்தியர்கள் எமது நாட்டுக்குள் படை எடுத்து எமது நாட்டிலும் வீயோரங்களில் மலம் கழிப்பர். இதன்மூலம் எமது நாட்டின் பழக்கவழக்கங்களை சீரழிப்பர். இவை மாத்திரமன்றி மீண்டும் சோழரின் ஆட்சிக்காலத்தில் இருந்தது போல் எமது நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் தமிழ் நாட்டை இணைத்து சோழ மண்டலத்தை உருவாக்கிக் கொடுப்பதற்கே புதிய அரசாங்கம் முயற்சிக்கின்றது.
அதுமாத்திரமன்றி வடக்கில் தமிழ் மக்கள் இனவாதப் பக்கத்தை விட்டு விலகியிருக்கும் நிலையில் மீண்டும் அங்கு இனவாத விதைகளை விதைக்க முயற்சி இடம்பெறுகின்றது. இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் ஜனநாயகத்தை பறிப்பதற்கும், அவர்களை இனவாதிகளின் கைகளுக்குள் சிக்க வைப்பதற்கும் முயற்சிக்கின்றது. இதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. அதேபோன்று மீண்டும் விடுதலைப் புலிகள் தலைதூக்குவதற்கும் இடமளிக்கப்போவதுமில்லை. இதனாலேயே, 1815ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெடித்த புரட்சியைப் போல் மைத்திரி – ரணில் அரசாங்கத்தை வெளியேற்றும் நூதன புரட்சியை மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்க நாம் திட்டமிட்டுள்ளோம். இதில் அனைவரும் இணைந்துகொண்டு, 65 ஆயிரம் உயிர்களை தியாகம் செய்து எமது படையினர் ஒருங்கிணைத்த நாட்டை பாதுகாக்க முன்வர வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் மீண்டும் ‘சோழ மண்டலம்’ உருவாகும்: விமல் வீரவங்ச