Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாகிஸ்தானில் மிக மோசமாக மன நிலை பாதிக்கப் பட்ட நபர் ஒருவருக்கு அரசு மரண தண்டனை அளிக்கும் திட்டத்தில் உள்ளது. இம்முடிவை  அங்கிருக்கும் மனித உரிமை அமைப்புக்கள் தீவிரமாகக் கண்டித்து வருகின்றன. கடந்த வருடம் நவம்பர் 2 ஆம் திகதி  முதல் paranoid schizophrenia என்ற  தீவிரமான மன நோயால் பாதிக்கப் பட்ட இம்டாட் அலி என்ற நபருக்கு பிளாக் வாரண்டு அளிக்கப் பட்டுள்ளதாகவும் இவர் தூக்கிலிடப் படும் முடிவு உறுதி செய்யப் பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

50 வயதாகும் இம்டாட் அலி 6 வருடங்களுக்கு முன்பதாக ஓர் சமய ஆசிரியரைக் கொலை செய்த குற்றத்துக்காக 2008 ஆம் ஆண்டு மரண தண்டனை அளிக்கப் பட்டிருந்தார். ஆனால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப் பட்ட மருத்துவப் பரிசோதனைகள் மூலம் அவரது மருத்துவரால் இவர் அப்பாவி என்றும் இவரது  நிலமை சுயநினைவு அற்றதாகவும் எதுவும் முடிவெடுத்து செய்யக் கூடிய நிலமையில் இல்லாததாகவும் இருப்பது உறுதிப் படுத்தப் பட்டது. எனினும் இதனையும் மீறி செப்டம்பரில் இம்டாட் தூக்கிலிடப் படவிருந்தார். ஆனால் கடைசி நிமிடத்தில் சுப்ரீம் கோர்ட் இவரது தூக்குத் தண்டனையைத் தள்ளிப் போட்டது. இந்தக் காலப் பகுதியும் கடந்த வாரம் முடிவடைந்துள்ள நிலையில் இம்டாட் எந்த நேரத்திலும் தூக்கிலிடப் படலாம் எனத் தெரிய வருகின்றது.

மேலும் இம்டாட்  அலியின் சட்டத்தரணிகளின் வாதங்களை நிராகரித்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் schizophrenia ஓர் மன நோய்  அல்ல என்றும் கருத்துத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாகிஸ்தான் அரசு இந்தத் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என அந்நாட்டின் உளவியல் மருத்துவர்கள் ஒன்று சேர கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும் 20 000 பேருக்கும் அதிகமானவர்கள் கையெழுத்திட்ட பெட்டிசன் ஒன்றிலும் இம்டாட் இன் தூக்கு ரத்து செய்யப் பட வேண்டும் எனவும் அவருக்கு கருணை அடிப்படையில் நீதி வழங்கப் பட வேண்டும் எனவும் பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹுஸ்ஸெயினுக்கு வேண்டுகோள் விடுக்கப் பட்டு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பும் அலியின் மரண தண்டனை பாகிஸ்தானுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் என்றும் இது மனித உரிமையை மீறிய செயல் என்பதால் அதன் அதிபர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

0 Responses to மிக மோசமாக மனநிலை பாதிக்கப் பட்ட நபருக்கு மரண தண்டனை அளிக்கும் திட்டத்தில் பாகிஸ்தான்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com