Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுவிட்ஸர்லாந்து சொலத்தூண் நகரில் ஈழத் தமிழர்களிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலியாகியுள்ளார்.  நேற்று முன்தினம்  சொலத்தூண் புகையிரத நிலையப் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், துப்பாக்கிப் பிரயோகமாக மாறிய போது, ஒருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானதாகவும், துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான தமிழர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மதியம் உயிரிழந்திருப்பதாகவும் காவல்துறைச் தகவல்களை ஆதாரம் காட்டிச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இச் சம்பவத்தில் பரிதாகரமாகப் பலியானவர், வவுனியா குருமன்காடு பகுதியை சேர்ந்த 29 வயதான கார்த்திக் பாலேந்திரன் எனவும், இது தொதடர்பான விசாரணைகளில், சந்தேகநபர் ஒருவர் கைதாகியிருப்பதாகவும், மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 Responses to சுவிஸ் தமிழர்களின் மோதல்-துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com