Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. நடவடிக்கை எடுக்க மறுத்தால் நாங்களே களம் இறங்கி பயங்கரவாத குழுக்களை அழிக்க நேரிடும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்க கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக அளவில் பயங்கரவாத எதிர்ப்பு போரில் பாகிஸ்தானும் இணைந்துள்ளது. அதனால் பயங்கரவாத இயக்கங்களை ஒடுக்க பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் நிதி உதவி அளித்து வருகிறது.இந்நிலையில் அமெரிக்கவிடம் இருந்து நிதி உதவி பெற்றுக்கொண்டு பயங்கரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதில்லை என்று அமெரிக்கா கருதுகிறது. இதனால் பாகிஸ்தான் மீது அமெரிக்கா கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தீவிரவாத நிதி தடுப்பு துணை மந்திரி ஆதம் சுஸூபின் செய்தியாளர்களிடம் கூறுகையில்,:பயங்கரவாத அமைப்புகளுக்கு, பாகிஸ்தான் ராணுவ உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் ஆதரவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதை நாங்கள் ஏற்க முடியாது.  பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. பயங்கரவாத குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்தால் நாங்களே களம் இறங்கி பயங்கரவாத குழுக்களை அழிக்க நேரிடும் என்று பாகிஸ்தானுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.

0 Responses to பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. மீது நடவடிக்கை எடுக்க மறுத்தால் நாங்களே களம் இறங்க நேரிடும்: அமெரிக்கா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com