Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து 100 Km தொலைவிலுள்ள உட்சுனோமியா நகரில் உள்ள பூங்கா  ஒன்றில் மக்கள் பலர் பங்கு கொண்டிருந்த திருவிழாவின் போது ஞாயிறு காலை 11:30 மணியளவில் இரட்டைக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இதில் ஒருவர் பலியானதுடன் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இத்தாக்குதல் ஒரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் என போலிசார் கருதுகின்றனர்.

ஜப்பான் ஊடகங்களின் தகவல் படி இத்தாக்குதலை நடத்திய 72 வயது மதிக்கத் தக்க முன்னால் இராணுவ அதிகாரி தனது வீட்டுக்குத் தீ வைத்தததுடன் பொதுமக்கள் வாகன நிறுத்தத்தில் காரைக் கொண்டு மோதி விட்டு அருகே இருந்த பூங்காவில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்  என அறிவிக்கப் பட்டுள்ளது. இவரது கருகிய ஆடையில் இருந்து பெறப்பட்ட ஓர் குறிப்பில் இவரின் பெயர் குறிப்பிடப் பட்டிருந்த போதும் அது ஊடகங்களுக்கு வெளியிடப் படவில்லை. குறித்த பூங்காவில் யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படாத நிலையில் இருவர் மாத்திரம் சற்று தீவிரமான காயங்களுக்கு உள்ளானதாகக் கூறப்படுகின்றது.

இந்தத் தற்கொலத் தாக்குதலுக்கான காரணம் என்னவென்று இதுவரை அறிவிக்கப் படாத நிலையில் விசாரணை நடத்தப் பட்டு வருவதாக உட்சுனோமியா போலிசார் அறிவித்துள்ளனர். நிக்கோ என்ற ஜப்பானின் பிரசித்தமான சுற்றுலாத் தலத்துக்கு அண்மையில் அமைந்துள்ள உட்சுமோனியா நகர் டொச்சிக்கி அணு உலைப் பகுதியின் தலைநகராகும். இந்நகரின் சனத்தொகை 500 000 என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஜப்பான் உட்சுனோமியா பூங்காவில் இரட்டைக் குண்டு வெடிப்பு : ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com