Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தற்போது பதற்றப்படுகிறார். அவர், சொன்ன பொய்கள் எல்லாம் மக்களிடம் பிடிபடத் தொடங்கியுள்ளது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளதாவது, “பூகோள அரசியல் பற்றிக் கதைத்தால், தங்களது எஜமானர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஆபத்து வரும் என்பதனால் தான் சுமந்திரன் மேடைகளில் பூலோக அரசியல் பற்றி கதைப்பதில்லை.

நாங்கள் பெற்ற வாக்குகள், கேவலம் அங்கஜன், விஜயகலா மற்றும் டக்ளஸ் பெற்ற வாக்குகளைக் காட்டிலும் குறைவு எனில், ஏன் அதைப்பற்றிக் கதைக்கின்றீர்கள். எம் மீது  இரகசிய காதல் போன்று செல்லும் இடமெல்லாம் எம்மை  பற்றி கதைக்கின்றார்.  பதட்டப்படுகின்றார்.

தற்போது சுமந்திரனின் நிலமை இறுகிக்கொண்டு வருகின்றது. சொன்ன பொய்கள் எல்லாவற்றினையும் திசை திருப்புவதற்காக இவ்வாறு அவர் கூறுகின்றார் போலிருக்கின்றது. தமிழ் மக்கள் சுமந்திரனின் கருத்துக்களைக் கேட்டு செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைந்து கொண்டு வருகின்றன. அதனை நினைத்து அவர் பதற்றமடைகின்றார்.

அரசியல் அமைப்புப் பற்றி கதைக்க முற்படும் போதெல்லாம் அரசியல் அமைப்புப் பற்றி தமக்கு மட்டும் தான் தெரியுமென சுமந்திரன் அனைத்து இடங்களிலும் தெரிவிக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்பந்தனுக்குக் கூட தெரியுமென அவர் சொல்வதில்லை. எல்லாமே தான் என்றவாறு கதைத்துக்கொண்டு திரிகின்றார்.

இனப்பிரச்சினை குறித்து ஒரு திட்டத்தினை வகுக்க முடியாது. தமிழ் மக்களின் முக்கியத்துவம் விளங்காது. தொடர்ந்தும் இவ்வாறான பொய்களைக் கூறிக்கொண்டிருந்தால் தனது அரசியலுக்கு ஆபத்து வந்து விடுமென பயப்படுகின்றார் போலிருக்கின்றது.” என்றுள்ளார்.

0 Responses to சுமந்திரன் பதற்றப்படுகிறார்; அவர் சொன்ன பொய்களை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com