புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் இணங்கியிருக்கவில்லை என்று அந்தக் கட்சியின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் இணங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார். குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள வழிநடத்தல் குழுவில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை. தேர்தல் சீர்திருத்தம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் அதிகார பகிர்வு குறித்து மாத்திரமே இதுவரை பேசப்பட்டுள்ளது.
மதச் சார்பற்ற ஒரு நாடாகவும், அனைத்து மதங்களுக்கும் சமவுரிமை வழங்கும் வகையிலுமே புதிய அரசியலமைப்பு அமைய வேண்டும் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது. இவ்வாறான நிலையில் எமக்கு உடன்பாடில்லாத விடயத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.” என்றுள்ளார்.

0 Responses to புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை எனும் கருத்தோடு த.தே.கூ இணங்கவில்லை: சுமந்திரன்