Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராஜபக்ஷக்களுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்துமாறு தான் எந்தவொரு தருணத்திலும் கோரவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அதுபோல, ராஜபக்ஷக்களை பாதுகாக்கும் எண்ணம் ஏதும் தன்னிடம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஆணைக்குழு அரசியல் நோக்கங்களைக் கருத்தில் கொண்டு செயற்படுகின்றதா?, என்கிற சந்தேகம் தனக்கு ஏற்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்தினைத் தொடர்ந்து சர்ச்சைகள் உருவாகியிருந்தன.

இதனையடுத்து, ஜனாதிபதிக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் கடந்த வியாழக்கிழமை சந்திப்பொன்று நடைபெற்றது. அதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது, “அரசாங்கம் என்ற வகையில் நான் இணைத்தே அனைத்தையும் கூறினேன். விசாரணை நடத்துபவர்கள் அவர்கள் மேற்கொள்ள போகும் நடவடிக்கைகளை எனக்கு அறிவிப்பதில்லை. அமைச்சர் கார் ஒன்றை எடுத்துச் சென்றதாக கூறி வழக்கு தொடர்கின்றனர். அப்படி யென்றால் அனைத்து அமைச்சர்களுக்கு எதிராகவும் வழக்கு தொடர வேண்டும். குறிப்பிட்ட அமைச்சா் ஏதோ பழிவாங்க நான் இதனை செய்கிறேன் என்று அவர் நினைக்கின்றார்.

கங்காராம விகாரையில் யானை ஒன்றை கைப்பற்ற நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொண்டுள்ளனர். விகாராதிபதி என்னிடம் கேட்கும் வரையில் எனக்கு எதுவும் தெரியாது.

மூன்று கடற்படையினரை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றமை அவர்கள் படம்பிடித்து ஊட கங்களுக்கு வழங்கி அவர்கள் தமக்கு சம்பவத்தை சாதகமாக பயன்படுத்தி கொள்வார்கள். இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டதும் வெளியில் வந்து நாம் படையினரை பழிவாங்குவதாக கூறுகின்றனர். இதனையே நான் கூறினேன்.

நான் கோத்தபாய ராஜபக்ஷவின் பெயரைக் கூட கூறவில்லை. இந்த அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என்று நான் கூறினேன். இது வலுவான அரசாங்கம் என்றும் கூறினேன்.” என்றுள்ளார்.

ஜனாதிபதியின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைத்து கொள்வது முக்கியமானது. நடத்தப்பட்டு வரும் விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டியதையே அனைவரும் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு ஜனாதி பதியும் இணக்கம் வெளியிட்டுள்ளார்.

0 Responses to ராஜபக்ஷக்களுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்துமாறு நான் கோரவில்லை: மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com