“உங்களை ஏமாற்றுவது என்று நாங்கள் நினைத்தால் ஏமாற்றுவோம்” என்று யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களில் ஒருவரான நடராஜா கஜனின் தாயார் நடராஜா சறோஜினியிடன் பொலிஸார் அச்சுறுத்தும் தொனியில் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கஜனின் தாயார் ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளதாவது, ''யாழ்ப்பாணம் வைத்தியசாலையிலிருந்து என்னையும் மகளையும் மற்றும் சுலக்ஷனின் தந்தையையும் ஒவ்வொரு பொலிஸார் கையை பிடித்து அழைத்துச் சென்று ஏசி வாகனம் ஒன்றினுள் ஏற்றி யாழ். பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனா். அங்கு எங்களுக்கு தேனீா் தந்தனா். ஆனால் நாங்கள் மறுத்துவிட்டோம். பின்னர், அங்கு பல்கலைக்கழக மாணவர்கள் வந்துவிட்டார்கள்.
இதனை நாங்கள் திட்டமிட்டு செய்யவில்லை தவறுதலாக நடந்துவிட்டது என அங்கு வைத்து பொலிஸார் எங்களிடம் தெரிவித்தனர். பொலிஸார் வெறியில் இருந்தார்களோ என்னவோ தெரியவில்லை. சுட்டதுதான் மாணவர்கள் மீது பட்டுவிட்டது. மன்னித்துக்கொள்ளுங்கள். இனிமேல் இப்படியொன்றும் நடக்காது.
சம்மந்தப்பட்ட பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்க கொழும்பில் இருந்து ஆட்கள் வருகின்றார்கள்., அவா்களை நாங்கள் கைது செய்திருக்கின்றோம். நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்போம். தெரியாமல் நடந்த இந்த சம்பவத்தை நீங்கள் மன்னித்துக்கொள்ளுங்கள்.
பொலிஸ் உங்களுக்கு பந்தல் போடுவதற்கும் கதிரைகள் பிஸ்கட், சோடாவும் தந்து எல்லா செலவையும் செய்வார்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து (யாழ்ப்பாணம்) இங்குள்ள (கிளிநொச்சி) டி.ஐ.ஜி. ஒபீசுக்கு கோல் பண்ணி எங்கட வீட்டு முகவரியையும் சொல்லி, அங்குள்ள பொலிஸாரை போய் எல்லா உதவியையும் செய்ய சொன்னார்கள்.
நாங்கள் செய்த குற்றத்திற்காக போஸ்மோட்டம், பெட்டிச் செலவு, வாகனச் செலவு எல்லாத்தையும் பொலிஸ் செய்து தாறம் என்றும், அந்த வீட்டுச் செலவு இந்தவீட்டுச்செலவு எல்லாத்தையும் நாங்கள் செய்யிறம் என்றும் சொன்னார்கள். ஆனால் இங்க எங்கட ஆட்கள் அவா்களை செய்ய விடவில்லை. பொலிஸார் இங்க வரக் கூடாது. உங்கட உதவியும் வேண்டாம். ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி அனுப்பிவிட்டுடினம்.
பின்னர் அங்கு வந்த எனது மகன் ஏன் இங்கு வந்தீர்கள். இவங்கட கதையை கேக்காதேங்கோ எண்டு திட்டினான். பிறகு எங்களை வைத்தியசாலையில் இறக்குறதுக்கு ஒரு தமிழ் பொலிஸ் வாகனத்துல ஏத்திக்கொண்டு வந்தவர்.
வரேக்க மகன், இவங்கள நம்பாதேங்கோ “பேக்காட்டுறாங்க“ எண்டு கத்திக் குளறிட்டான். அந்த தமிழ் பொலிஸ் சொன்னார், உங்களை பேக்காட்டுற எண்டு நினைச்சால் பேக்காட்டுவம் இல்லன்டா உதவி செய்வம் எண்டவர்.
பிறகு நாங்கள் அங்க இறங்கி கிளிநொச்சிக்கு வந்துட்டம்.
பிறகு போன்ல கதைச்ச ஒராள், கொழும்பிலிருந்து பொலிஸ் பெரியாள் ஒருவர் கதைக்கிறன் என்று சொல்லி அவர் சொன்னார், உங்கட பிள்ளைகள் ஏ.எல், ஓ.எல் படிச்சிருக்கினமா? நாங்கள் அவா்களுக்கு வேலைவாய்ப்பு தாறம். உங்களுக்கு நாங்கள் இந்த உதவியை மனிதாபிமான முறையில் செய்யிறம். மன்னிச்சிக்கொள்ளுங்கள். தவறுதலாக நடந்துவிட்டது என்றார்.'' என்றுள்ளார்.

0 Responses to ‘உங்களை ஏமாற்ற நினைத்தால் ஏமாற்றுவோம்’; உயிரிழந்த மாணவரின் தாயாரை அச்சுறுத்திய பொலிஸார்!