Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ISI அங்கிருக்கும் தீவிரவாத குழுக்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று குற்றம் சாட்டியுள்ள அமெரிக்கா பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத வலையமைப்புக்களை தனியாகச் செயற்பட்டு அழிக்க இனிமேலும் தயங்க மாட்டோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் தீவிரவாதத்துக்கு எதிரான நாடுகளின் கூட்டமைப்பில் முக்கிய பங்காளியாக பாகிஸ்தான் உள்ள போதும் பாகிஸ்தான் தனது நாட்டில் செயற்பட்டு வரும் தீவிரவாத குழுக்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பது அமெரிக்காவின் அண்மைய குற்றச்சாட்டாக உள்ளது. பாகிஸ்தான் தனது சொந்த மண்ணிலேயே சமீப காலமாக சந்தைகள், மசூதிகள் மற்றும் பாடசாலைகளில் மோசமான தீவிரவாதத் தாக்குதல்களைச் சந்தித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமெரிக்காவின் தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்வதைத் தடுக்கும் பிரிவைச் சேர்ந்த செயலாளர் ஆடம் சுபின்  என்பவர் கூறுகையில், பாகிஸ்தானின் வலிமை மிக்க உளவு அமைப்பான ஐ எஸ் ஐ அந்நாட்டில் இருந்து செயற்பட்டு வரும் அனைத்து தீவிரவாத அமைப்புக்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்காததுடன் சில அமைப்புக்களை ஊக்குவித்தும் வருகின்றது என்றுள்ளார். மேலும் ஐ  எஸ் ஐ தீவிரவாத குழுக்களுக்கு எதிராக செயற்பட எத்தகைய உதவியை நாடினாலும் நாம் செய்யத் தயாராக உள்ளோம் எனவும் ஆடம் சுபின் தெரிவித்துள்ளார்.

ஆப்கானின் தலைநகர் காபூல் உட்பட அந்நாட்டின் பல பகுதிகளில் தலிபான்களுடன் இணைந்து தாக்குதல் நடத்தி வரும் ஹக்கானி என்ற தீவிரவாத வலையமைப்பு பாகிஸ்தான் மண்ணில் இருந்து  செயற்படுவதாகவும் இவர்களுக்கு பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்கள் சிலவும் உதவி செய்து வருவதாகவும் பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் இடம்பெற்ற மும்பைத் தாக்குதல் போன்ற முக்கிய தீவிரவாதத் தாக்குதல்களை மேற்கொண்ட குழுக்களுக்கும் பாகிஸ்தானின் ஆதரவு இருந்தது என்று இந்தியாவும் அச்சமயத்தில் அதிருப்தி தெரிவித்து இருந்தது.

0 Responses to பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத வலையமைப்புக்களைத் தனியாக செயற்பட்டு அழிப்போம் : அமெரிக்கா கடும் எச்சரிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com