Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மனித குலத்தின் மிகப்பெரிய எதிரி பயங்கரவாதம்  என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். உத்திர பிரதேசம் லக்னோவில் நடைப்பெற்ற தசரா விழாவில் நரேந்திர மோடி பங்கேற்று உரை நிகழ்த்தினார்.உரையில் மனித குலத்தைப் பாதுகாக்க பயங்கரவாதிகளை வேரோடு அழிக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை என்றும்,  மனித குலத்துக்கு மிகப்பெரிய எதிரி என்று சொன்னால் அது பயங்கரவாதம் மட்டுமே  என்றும் கூறினார். 

மேலும், பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும், பயங்கர வாதத்துக்கு ஆதரவு அளிப்பவர்களையும், பயங்கரவாதத்துக்கு துணை நிற்பவர்களை ஒரு போதும் சகித்துக்கொள்ள முடியாது என்றும் மோடி கூறியுள்ளார்.எப்போதும், டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் தசரா விழாவில் பங்கேற்கும் மோடி, உத்திர பிரதேசத்தில் விரைவில் நடக்க உள்ள தேர்தலை கருத்தில் கொண்டு, அங்கு நடைப்பெற்ற தசரா விழாவில் பங்கேற்றார் என்பதுக் குறிப்பிடத்  தக்கது.

0 Responses to மனித குலத்தின் மிகப்பெரிய எதிரி பயங்கரவாதம்: நரேந்திர மோடி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com