திங்கட்கிழமை சீனாவின் சாங்ஷி மாகாணத்திலுள்ள அதிவேகப் பாதையில் பனி மூட்டம் காரணமாகப் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய வாகன விபத்து ஏற்பட்டுள்ளது. 56 வாகனங்கள் ஒன்றுடன் இன்னொன்று மோதி ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கி 17 பேர் பலியானதாகவும் மேலும் 37 பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகின்றது.
பீஜிங் குன்மிங் அதிவேகப் பாதையில் கடும் பனி மற்றும் மழைப் பொழிவு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில் காயமடைந்தவர்களது உடல் நிலை தேறி வருவதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் மீட்புப் பணியில் உள்ளூர் போலிசார், மருத்துவர்கள் குழு, தீயணைப்புப் படையினர் மற்றும் அரச அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட பெரும்பாலான வாகனங்கள் பாரிய டிரக் வண்டிகள் எனக் கூறப்படுகின்றது. உலக சுகாதாரத் தாபனத்தின் புள்ளி விபரப்படி சீனாவில் வீதி விபத்துக்கள் காரணமாக ஒவ்வொரு வருடமும் சராசரியாக 200 000 பேர் கொல்லப் பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to பனி மூட்டம் காரணமாக சீனாவில் பாரிய வாகன விபத்து:17 பேர் பலி