ஜேர்மனியில் இயங்கி வரும் இஸ்லாமியக் குழு ஒன்றை தடை செய்வதாக ஜேர்மனி அரசு அறிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை ஜேர்மனியில் இயங்கி வரும் 'The true religion' என்ற இஸ்லாமியக் குழுவைத் தடை செய்வதாக ஜேர்மனி அரசு அறிவித்துள்ளதுடன் அந்த குழு சார்ந்த அலுவலகங்கள், சேமிப்பு அறைகள், மசூதிகள் மட்டுமன்றி அக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் அபார்ட்மெண்ட் கட்டடங்கள் உட்பட சுமார் 190 இடங்களில் அதிரடித் தேடுதல் நடவடிக்கையையும் ஜேர்மனி போலிசார் மேற்கொண்டுள்ளனர்.
இந்த அதிரடி நடவடிக்கையில் எவரும் கைது செய்யப் படவில்லை என்ற போதும் மேற்கு ஜேர்மனி மற்றும் பேர்லின் பகுதிகளில் சுமார் 60 பகுதிகளில் நடத்தப் பட்ட தேடுதலில் பல ஆவணங்கள், கணணி ஹார்ட் டிரைவ்கள், ஸ்மார்ட் தொலைபேசிகள் மற்றும் சில ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டிருப்பதாக ஜேர்மனி உள்துறை அமைச்சர் தோமஸ் டே மைஷியெரே தெரிவித்துள்ளார். முக்கியமாக குறித்த இஸ்லாமியக் குழு தடை செய்யப் பட்டதற்கு ஜேர்மனியிலுள்ள இளவயதினரை திசை திருப்பி ஈராக்கிலும் சிரியாவிலும் சென்று சண்டையிட அக்குழு தூண்டியதே காரணம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. 'Read!' என்று அழைக்கப் படும் குறித்த இஸ்லாமியக் குழு ஜேர்மனி மொழியில் குரானை அச்சிட்டு நாடு முழுதும் விநியோகம் செய்து வந்ததாகவும் ஜேர்மனியில் இக்குழுவின் பிரச்சாரங்களில் பங்கு பற்றிய பின்னர் சுமார் 140 இற்கும் அதிகமான இளவயதினர் இதுவரை சிரியா மற்றும் ஈராக்குக்கு ISIS போராளிகளுடன் சேரச் சென்று இருப்பதாகவும் ஜேர்மனியின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த இயக்கம் ஜேர்மனி மொழியில் மொழி மாற்றம் செய்து வெளியிட்ட குரான் பதிப்பில் வெறுப்புணர்வு மற்றும் இனவாதக் கொள்கைகள் அடங்கி இருந்ததாக டே மைஷியெரே பேர்லினில் வைத்து பத்திரிகையாளர்களுக்குத் தெரிவித்துள்ளார். குறித்த Read குழுவில் மொத்தம் 500 உறுப்பினர்கள் இருந்ததாகவும் மேற்கு நகரான கொலோனே இல் 21 000 ஜேர்மனி மொழியிலான குரான் பிரதிகளைக் கண்டு பிடித்ததாகவும் ஜேர்மனி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ISIS தீவிரவாத இயக்கத்துக்கு நிதியுதவி செய்த பேரில் ஜேர்மனி அதிகாரிகள் 5 பேரைக் கைது செய்து ஒரு வாரத்துக்குள் Read இஸ்லாமியக் குழு தடை செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தடை உத்தரவு தீவிரவாதத்துக்கு எதிரானது மட்டுமே என்றும் ஜேர்மனியில் சமாதான அடிப்படையிலான இஸ்லாமை கடைப்பிடிப்பதற்கு எவருக்கும் தடை இல்லை எனவும் ஜேர்மன் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. ஜேர்மனியில் இருந்து சிரியா மற்றும் ஈராக்குக்கு போராளிக் குழுக்களுடன் சேர்வதற்காக இதுவரை 850 பேர் வரை சென்றிருப்பதாகவும் மேலும் சுமார் 9200 பேர் வன்முறையும் இனவாதமும் மிக்க இஸ்லாமைப் பின்பற்றி வருவதால் எத்தருணத்திலும் வன்முறையாளர்களாக மாறும் அபாயத்தில் இருப்பதாகவும் ஜேர்மனியின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 Responses to ஜேர்மனியில் தடை செய்யப் பட்டது இஸ்லாமிய இயக்கம்: 190 இடங்களில் போலிஸ் தேடுதல்!