Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த மே மாதம் வரவிருந்த போதிலும், அது தவறிவிட்டதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

இந்திய பத்திரிகையொன்றுக்கு அவர் கூறியுள்ளதாவது, “பராக் ஒபாமா, 2016ஆம் ஆண்டு மே மாதமளவிலேயே இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்தார். எனினும், வெசாக் வாரம் என்பதனால், இலங்கைக்கான அவருடைய விஜயமானது தவறிவிட்டது.

இலங்கையில் ஏற்பட்டிருந்த ஆட்சி மாற்றத்தினால், இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் நல்ல நிலைமையொன்று உருவாகியது. ஐக்கிய அமெரிக்காவின் இராஜங்கச் செயலாளர், 40 வருடங்களுக்கு பின்னரே இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனல்ட் ட்ரம்ப் உடன், நல்லத்தொடர்புகளை கட்டியெழுப்புவதே, இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய நோக்கம். அதனை செய்வதற்கு முயற்சிப்போம்” என்றுள்ளார்.

0 Responses to இலங்கைக்கான ஒபாமாவின் விஜயம் தவறிவிட்டது: மங்கள சமரவீர

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com