அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஹிலாரி கிளிங்டன் வெற்றி பெறத் தவறியதால் அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு பெண் அதிபராவார் என்ற வரலாறு மறுபடியும் தகர்ந்து போயுள்ளது.
ஆனாலும் வேறு எந்த பெண் வேட்பாளர்களையும் விட அமெரிக்க அதிபர் தேர்தலில் தொடர்ந்து இரு தடவைகள் போட்டியிட்டு 2008 இல் அதிபர் ஒபாமாவுக்கும் இம்முறை குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்புக்கும் கடும் சவாலாக விளங்கி சாதனை படைத்துள்ள ஹிலாரி கிளிங்டன் பல அமெரிக்க மக்கள் மனதில் நீங்கா இடமும் பிடித்துள்ளார். மேலும் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் தனது தோல்வியைப் பொருட் படுத்தாது உடனடியாக டொனால்டு டிரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் ஹிலாரி.
ஹிலாரி கிளிங்டனின் கணவரான பில் கிளிங்டன் அமெரிக்க அதிபராக 1993 முதல் 2001 ஆம் ஆண்டு வரை கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2000 ஆம் ஆண்டு நியூயோர்க்கில் இருந்து அமெரிக்க செனட்டராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரேயொரு பெண்மணி ஹிலாரி ஆவார். 2009 ஆம் ஆண்டு அமெரிக்காவின் 3 ஆவது பெண் பாதுகாப்புச் செயலாளராகவும் பதவி ஏற்றார். ஜூலை மாதம் அமெரிக்காவின் பலம் பொருந்திய கட்சி ஒன்றின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அதிபர் வேட்பாளராகத் தேர்வான முதல் பெண்மணியும் ஹிலாரி என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிக் கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது ஈ மெயில் சர்ச்சையில் சிக்கி இருந்த ஹிலாரி FBI ஆல் விசாரணை செய்யப் படும் நிலையிலும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை சர்வதேசத்தை சேர்ந்த பல நாடுகளும் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்புக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

0 Responses to 2 ஆவது தடவையாக அதிபராகும் வாய்ப்பைத் தவற விட்டாலும் அமெரிக்கர்களின் மனதில் இடம் பிடித்த ஹிலாரி கிளிங்டன்