ஐ.எஸ். (இஸ்லாமிய இராச்சியம்- ஐ.எஸ்.ஐ.எஸ்) தீவிரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளதாக இந்தியாவின் உளவுத் துறையான ‘றோ’ அமைப்பிடமிருந்து எந்தவொரு உத்தியோகபூர்வ அறிக்கையும் பாதுகாப்பு அமைச்சுக்கு கிடைக்கவில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஐ.எஸ். தீவிரவாதிகள் இலங்கைக்குள்ள ஊடுருவியுள்ளனர் என்று இந்தியாவின் உளவுத்துறையான ‘றோ’ அமைப்பிடமிருந்து அறிக்கை கிடைத்துள்ளதாக ஊடகங்களே கூறுகின்றதே தவிர உத்தியோகபூர்வ அறிக்கை எதுவும் எமக்கு கிடைக்கவில்லை. அத்துடன், ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இலங்கையைச் சேர்ந்த 32 பேர் தொடர்புபட்டுள்ளனர் என்று அமைச்சர்கள் கூறியுள்ளது தொடர்பில், நான் எந்தக் கருத்தையும் கூற விரும்பவில்லை.” என்றுள்ளார்.

0 Responses to ஐ.எஸ். தீவிரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளதாக ‘றோ’ தகவல் ஏதும் அனுப்பவில்லை: கருணாசேன ஹெட்டியாராச்சி