“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான நடராஜா ரவிராஜ் ஜோசப் பரராஐசிங்கம் ஆகியோர் தமிழ் மக்களுக்கு அவசியமானவர்கள். அரசியலில் முக்கியமானர்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் எடுத்துக் கூறி இருக்கிறேன். ஆனால், மஹிந்த ராஜபக்ஷ கூறினார், “நீங்கள் கூறுவது எனக்கு விளங்குகிறது. எனினும், இராணுவத்திற்கு புரியவில்லை என்று.” என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ரவிராஜ் தமிழ் மக்களிடம் மாத்திரமன்றி சிங்கள மக்களிடமும் செல்வாக்கு பெற்றிருந்தார். சிங்கள மக்கள் விளங்கக்கூடிய வகையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறி வந்தார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சாவகச்சேரியில் இடம்பெற்ற அமரர் ரவிராஜின் 10வது ஆண்டு நினைவு தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ரவிராஜ் என்னுடைய நல்ல நண்பர். தமிழ் மக்களினுடைய பிரச்சினையை தென்னிலங்கை மக்களுக்கு அவர்களுடைய மொழியாகிய சிங்ளத்தில் எடுத்து கூறினார். ஒருவித மிதவாதப் போக்குடன் தமிழ் மக்களுடைய அரசியலை தமிழ்தேசியக் கூட்டமைப்பினூடாக முன்வைத்திருந்தார்.
இவர் தீவிரவாத இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருக்கவில்லை. தென்னிலங்கை மக்களுக்கு வட இலங்கை மக்களின் துயரங்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக் கூடாக கொண்டு சென்றார். நான் தென் இலங்கை சார்பிலும் அவர் வட இலங்கை சார்பிலும் பல அரசியல் நிகழ்சிகளில் பங்குபற்றியிருந்தோம்.
ரவிராஜ் தமிழ் மக்களிடம் மாத்திரமன்றி சிங்கள மக்களிடமும் செல்வாக்கு பெற்றிருந்தார். ரவிராஜ் பேசும் சிங்களத்தினை சிங்கள மக்கள் ரசித்தனர். சிங்கள மக்கள் விளங்கக்கூடிய வகையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவார். ரவிராஜ் இனவாதியல்ல. தமிழ் மக்களினுடைய உரிமைக்காக போராடினார். அவ்வாறான நிலையினை ஏற்படுத்தத்தான் முயற்சிக்கிறோம்.
அமரர் ரவிராஜ் மற்றும் ஜோசப் பரராஐசிங்கம் ஆகியோர் தமிழ் மக்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் எடுத்துக் கூறி இருக்கிறேன். அமரர் ரவிராஜ் மற்றும் ஜோசப் பரராஐசிங்கம் ஆகியோர் தீவிரவாதப் போக்கை கடைப்பிடிக்காது மிதவாதப் போக்குடன் எம்முடன் பயணித்தனர். ஆனால், மஹிந்த ராஜபக்ஷ கூறினார் நீங்கள் கூறுவது எனக்கு விளங்குகிறது ஆனால் இராணுவத்திற்கு புரியவில்லை என்றார்.
ரவிராஜ் உயிருடன் இருந்திருந்தால் அவருடன் பலவற்றை மிதவாதப் போக்குடன் பேசி பெற்றிருக்கலாம். ஆனால் அவருடைய இழப்பால் பலவற்றை இழந்துவிட்டோம். ஆயினும் நாம் நாட்டின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக 6 உபகுழுக்களாக பிரிந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். அந்த குழுவினுடைய அறிக்கையை அமுலாக்குவதே ரவிராஜினுடைய சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுப்பதாக அமையும். அமரர் ரவிராஜ் என்ன இலட்சியத்திற்காக பாடுபட்டாரோ அவரது இலட்சி யத்தை அடையபாடுபடுவோம்.” என்றுள்ளார்.

0 Responses to ‘ரவிராஜ் முக்கியமானவர்’ என்று மஹிந்தவிடம் கூறினேன்; ‘அது இராணுவத்திற்கு புரியவில்லை’ என்றார்: ராஜித